தொடர்ந்து 4வது ஆண்டாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை

மாணவி விஷாலி 600 க்கு 594 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

May 8, 2026 - 13:19
 0  425
தொடர்ந்து 4வது ஆண்டாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை

கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளது. 

கடந்த நான்கு ஆண்டு காலமாக கோவில்பட்டி கவுனியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கல்வி மாவட்ட அளவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இப்பள்ளியில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய 62 மாணவர்களும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவி விஷாலி 600 க்கு 594 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வணிகவியல், பொருளியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

மேலும், கணிதம், வணிக கணிதம், வணிகவியல், பொருளியல், கணினி அறிவியல் பாடங்களில் தலா ஒரு மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி தாளாளர், இயக்குனர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 9
Dislike Dislike 1
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 2
Wow Wow 10