ஆட்சி அமைக்க த. வெ. க. தலைவர் விஜய்யை அழைக்காத ஆளுநரை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். நகரத் தலைவர் அருண்பாண்டியன், வட்டாரத் தலைவர் ரமேஷ் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் 108 இடங்களை பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை பதவியேற்க அழைக்காமல் முட்டுக்கட்டை போட்டு வரும் தமிழக ஆளுநரை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் கோவில்பட்டி நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். நகரத் தலைவர் அருண்பாண்டியன், வட்டாரத் தலைவர் ரமேஷ் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில், மாவட்ட பொது செயலாளர் INTUC ராஜாசேகர், PCCஉறுப்பினர்கள் மகேஷ்குமார், உமாசங்கர், வழக்கறிஞர் அய்யலுசாமி, ராஜாராம்,மாவட்ட செயலாளர் துரைராஜ்,இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜான் பிரிட்டோ பெத்துராஜ்,smts ராஜா,sm தாஸ், குணசேகரன்,வட்டார தலைவர்கள் ஜேம்ஸ் லாரன்ஸ், போத்திராஜ், யோகேஷ், அப்பனாசாமி, கென்னடிராஜ், ரவி,தியாகராஜன், சங்கர், தியாகராஜன், அபிஷேக், முருகன், பெரியசாமி, தர்மர், சுந்தர்ராஜ், தட்சணமூர்த்தி, சுடலைமணி, கிருபாகரன், நல்லமதி, காமராஜ், முனியசாமி, பிச்சைக்கனி, அருணாச்சலம், ஜெகன், ஹரிபாலகிருஷ்ணன், அருணாச்சலமூர்த்தி, ஆறுமுகசாமி, செல்வராஜ்பாண்டியன், ஆல்வார்சாமி, கனகராஜ், வேலாயுதசாமி, பேரையா, அய்யமா,TVK கட்சியை சேர்ந்த கனகராஜ் ஒன்றிய செயலாளர் சக்தி கருப்பு ஒன்றிய துணை தலைவர் மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0