விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் விவசாயிகள் சங்கத்தினர்

மாநில தலைவர் O. A. நாராயணசாமி தலைமையில் தலையில் முக்காடு போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Jun 8, 2026 - 14:33
Jun 8, 2026 - 14:36
 0  14
விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் விவசாயிகள் சங்கத்தினர்

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன், நகை கடன், கால்நடை கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட உரங்களின் விலையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் அதன் மாநில தலைவர் O. A. நாராயணசாமி தலைமையில் தலையில் முக்காடு போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினையும் சார் ஆட்சியர் ஹிமான்ஷீமங்களிடம் வழங்கினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0