மு. க. அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி கோவில்பட்டியில் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபரால் பரபரப்பு

போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கீழே இறக்க பேச்சுவார்த்தை

Apr 29, 2026 - 11:24
May 7, 2026 - 12:15
 0  124
மு. க. அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி  கோவில்பட்டியில் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபரால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் ஜான் (57). இவரது சொந்த ஊர் மதுரை. கோவில்பட்டி சண்முகா நகரில் தங்கி இருந்து மோட்டார் வாகன உரிமம் பெறுவது, புதுப்பித்தல், டிரைவிங் லைசன்ஸ் பெறுவது தொடர்பான ஆலோசகராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரிமை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி தாமஸ் நகரில் உள்ள 100 அடி உயரமுள்ள தனியார் செல் போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கைமில் பெட்ரோல் கேனில் சென்று தீ குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மாரியப்பன் நைசாக பேசி பெட்ரோல் கேனை கீழே போட வைத்தனர். 

தொடர்ந்து அவரை கீழே இறங்க வைக்க போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கீழே இறக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 2
Wow Wow 0