தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு - கோவில்பட்டி மையத்தில் பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்ட மாணவ - மாணவிகள்
5 மையங்களில் மொத்தம் 1,968 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.
தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு - கோவில்பட்டி மையத்தில் பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்ட மாணவ - மாணவிகள்
2026-27 கல்வியாண்டுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது; இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 22.80 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். பிற்பகல் 1.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், மாணவர்கள் முன்னதாகவே வரவும், ஆடை கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி (480 பேர்), கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (480 பேர்), தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளி (240 பேர்), அரசு பாலிடெக்னிக் கல்லூரி (288 பேர்), தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (480 பேர்) ஆகிய 5 மையங்களில் மொத்தம் 1,968 மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர்.
கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலையிலிருந்து மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஆர்வமாக காத்திருந்தனர். தற்போது தீவிர பரிசோதனைக்கு பின்னர் மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0