த. வெ. க தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 84வயது முதியவர் சாலை மறியல் போராட்டத்தினால் பரபரப்பு

விஜயை ஆட்சி அமைக்க விடுங்கள் இல்லை என்றால் என்னை கைது செய்யுங்கள் முரண்டு பிடித்த முதியவரால் பரபரப்பு

May 7, 2026 - 12:10
 0  54
த. வெ. க தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 84வயது முதியவர் சாலை மறியல் போராட்டத்தினால் பரபரப்பு

 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க  முயற்சி மேற்கொண்டு வருகிறது.


 இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதை கண்டித்தும், உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவில்  பகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 84வயது முதியவர் ராமகிருஷ்ணன் என்பவர் சாலை மறியல் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியுடன்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்து தகவல் கிடைத்ததும் கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன்உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதுபோன்று போராடுகிற ஈடுபடக்கூடாது என்று கூறி வீட்டுக்கு போக அறிவுறுத்தினர். ஆனால் முதியவர் ராமகிருஷ்ணன் தன்னை கைது செய்து சிறையில் படியுங்கள் என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததால்  பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்  அருண்பாண்டியன் மற்றும் ரமேஷ் மூர்த்தி  போராட்டத்தில் ஈடுபட்ட ராமகிருஷ்ணனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அழைத்து சென்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0