போராட்டத்தில் ஈடுபட்டு கீழே இறங்க முடியமால் பரிதவித்தவரை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்
மு. க. அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி கோவில்பட்டியில் 100 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் ஜான் (57). இவரது சொந்த ஊர் மதுரை. கோவில்பட்டி சண்முகா நகரில் தங்கி இருந்து மோட்டார் வாகன உரிமம் பெறுவது, புதுப்பித்தல், டிரைவிங் லைசன்ஸ் பெறுவது தொடர்பான ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரிமை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி தாமஸ் நகரில் உள்ள 100 அடி உயரமுள்ள தனியார் செல் போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கைமில் பெட்ரோல் கேனில் சென்று தீ குளிக்க போவதாக ற்கொலை மிரட்டல் விடுத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மாரியப்பன் நைசாக பேசி பெட்ரோல் கேனை கீழே போட வைத்தனர். தொடர்ந்து அவரை கீழே இறங்க வைக்க போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் ஜான் இறக்க சம்மதம் தெரிவித்தார். இருந்த போதிலும் வெயில் அதிகமாக இருப்பதால் தன்னால் இறங்க இயலாது என்று கூறியதால் தீயணைப்புத்துறையினர் மேலே ஏறி ஜானை பாத்திரமாக கீழே இறங்கினர். போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0