கோவில்பட்டியில் நடைபெற்று வரும் ஹாக்கி பயிற்சி முகாமில் வீரர்களுக்கு பயிற்சி அளித்த இந்திய ஹாக்கி அணி வீரர் மாரீஸ்வரன்
இந்திய தடகள வீராங்கனை நிவேதிதா வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக ஆண்டுதோறும் கோடை கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பயிற்ச்சி முகாம் கடந்த 14ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 30ந்தேதி வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சி முகாம் கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஹாக்கி மைதானத்தில் தினமும் காலை, மாலை நடைபெற்று வருகிறது.
இதில் 80க்கும் மேற்பட்ட இளம் வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற பயிற்சி முகாமில் இந்திய ஹாக்கி அணி வீரர் மாரீஸ்வரன் மற்றும் இந்திய தடகள வீராங்கனை நிவேதிதா வீரர்களுக்கு ஹாக்கி நுணுக்கங்கள் குறித்தும், உடல் திறன் குறித்தும் வகுப்புகள் எடுத்தனர்.
What's Your Reaction?
Like
5
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
2