மாநில அளவிலான ஹாக்கி போட்டி :தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி சாம்பியன்
இறுதிப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் மாவட்ட அணிய வீட்டில் தூத்துக்குடி மாவட்ட அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆண்கள் அணி சாம்பியன் பட்டம் பெற்றது ஏ பிரிவில் இடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட அணி முதல் போட்டியில் ஈரோடு மாவட்ட அணியை 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இரண்டாவது லீக் போட்டியில் திருச்சி மாவட்ட அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது மூன்றாவது போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணியை 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது தனது நான்காவது கடைசி லீக் போட்டியில் தென்காசி மாவட்ட அணியை 3- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது கால் இருதி சுற்று போட்டியில் சென்னை மாவட்ட அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது அரையிறுதி போட்டியில் கோயமுத்தூர் மாவட்ட அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இறுதி போட்டி இராமநாதபுரம் மாவட்ட அணியும் தூத்துக்குடி மாவட்ட அணியும் பல பரிட்சை நடைபெற்றது விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஜூனியர் சாம்பியன் பட்டம் பெற்று தூத்துக்குடி மாவட்ட அணி சிறப்பு பெற்றது தூத்துக்குடி மாவட்ட அணியின் தலைவர் அருண் சிறந்த முன்கல வீரருக்கான விருதை பெற்றார் போட்டியின் சிறந்த வீரராக அழகு மோகனப்ரியன் பெற்றார் அணியின் பயிற்சியாளர் முத்துக்குமார் புனைப்பெயர்ச்சியாளர் மாயாண்டி அணி மேலாளர் காளிமுத்து பாண்டியராஜா தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு வீரர்களுடன் கோப்பையை பெற்று சிறப்பித்தார்கள
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0