தூத்துக்குடி மாவட்ட சீனியர் ஆண்கள் ஹாக்கி அணி அறிவிப்பு

கோவில்பட்டியில் மே ஒன்பதாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சீனியர் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி தூத்துக்குடி வ உ சி துறைமுக ஆணைய கோப்பைக்காக நடத்தப்பட உள்ளது

May 8, 2026 - 18:01
 0  2
தூத்துக்குடி மாவட்ட சீனியர் ஆண்கள் ஹாக்கி அணி அறிவிப்பு

கோவில்பட்டியில் மே ஒன்பதாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சார்பாக ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சீனியர் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி தூத்துக்குடி வ உ சி துறைமுக ஆணைய கோப்பைக்காக நடத்தப்பட உள்ளது இப்போட்டியில் 35 மாவட்ட சீனியர் ஹாக்கி அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன நாளை சனிக்கிழமை காலை ஆறு முப்பது மணி அளவில் முதல் போட்டியாக தூத்துக்குடி மாவட்ட அணியும் திண்டுக்கல் மாவட்ட அணியும் விளையாட உள்ளது.

 இப்போட்டியை நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர் எஸ் ரமேஷ் தலைமை தாங்க உள்ளார் உன்னால் இந்திய ஹாக்கி வீரர் ஒலிம்பியன் திருமால்வளவன் போட்டியை துவக்கி வைக்க இருக்கிறார்கள் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள் போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுகள் நடைபெறும் தேர்வு குழுவினர் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்து தமிழக ஹாக்கி அணி தேர்வு செய்யப்பட்டு புவனேஸ்வரில் நடைபெறும் தேசிய அளவிலான சீனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்படுவார்கள் போட்டியின் இயக்குனராக அணில் நடுவர்களின் மேலாளர்களாக சரவணகுமார் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தேர்வு குழு தலைவர் குரு சித்திர சண்முகி பாரதி ஆகியோனிடா தமிழ்நாடு ஹாக்கி போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து பாண்டியராஜா துறைமுக ஹாக்கி பொறுப்பாளர் ராஜ்குமார் கென்னடி மற்றும் மூத்த வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி மாவட்ட அணி 28 பேர் கொண்ட பயிற்சி முகாம் நடைபெற்ற வந்தது. அந்த முகம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை 18 பேர் கொண்ட தூத்துக்குடி மாவட்ட அணி மாவட்ட செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி அறிவித்தார் வீரர்கள்

 பின்வருமாறு கோல் கீப்பர் ஜெபின், அருணாச்சலம், தடுப்பு ஆட்டக்காரர்கள் கிருஷ்ணன், மதுபாலன், நிசி தேவ அருள், ராமநாதன், அரவிந்த், நந்தகுமார், ராகவன், மணிசங்கர், மாரீஸ்வரன் (அணித்தலைவர்) அரவிந்த், பாலா, மனோஜ் குமார், நவீன் ராஜ்குமார், முத்துக்குமார், இசக்கிமுத்து, முருகேசன் பயிற்சியாளர் முத்துக்குமார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0