பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா : தமிழக அரசு சார்பில் மரியாதை!

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மரியாதை செலுத்தினார்.

May 8, 2026 - 12:19
May 8, 2026 - 12:21
 0  9
பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா : தமிழக அரசு சார்பில் மரியாதை!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வீரசக்கதேவி ஆலய திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வீரசக்கதேவி ஆலய திருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0