கோவில்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனை: 3 பேர் கைது

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 994 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

May 8, 2026 - 21:14
 0  97
கோவில்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனை: 3 பேர் கைது

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீஸார் கோவில்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த சண்முகையா மகன் இருளப்பசாமி (55), அய்யனேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளியப்பன் மகன் மணிகண்டன் (50), கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம் மகன் மனோஜ் குமார் (23) என்பதும், அவர்கள் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 994 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0