கோவில்பட்டி அருகே மந்திதோப்பு ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Apr 27, 2026 - 15:47
May 7, 2026 - 12:16
 0  24
கோவில்பட்டி அருகே மந்திதோப்பு ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலையில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்ற நிலையில் தொடர்;ந்து யாகசாலையில் இருந்த புனித நீர் அடங்கிய கும்பங்கள் மேள தள முழங்க எடுத்துச்செல்லப்பட்டு விமான கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, தீபாரதனையுடன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

 இதனை தொடர்ந்து ஸ்ரீகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0