தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி அறிவிப்பு

அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இன்று காலை கோயம்புத்தூர் புறப்பட்டு சென்றனர்.

Apr 27, 2026 - 16:34
May 7, 2026 - 12:16
 0  54
தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணி அறிவிப்பு

கோயம்புத்தூரில் ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மே 2 தேதி வரை ஜூனியர் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள 33 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன அதில் ஏ பிரிவில் தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, ஆகிய மாவட்டங்கள் விளையாடுகின்றன போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன. நடப்புச் சாம்பியன் தூத்துக்குடி மாவட்ட அணி வீரர்கள் கடந்த ஒரு வார காலமாக கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கைப்புல் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். முகாமின் இறுதியில் 18 பேர் கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் ஹாக்கி அணியை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி அறிவித்தார். அதன் படி கோல் கீப்பர் முத்து ராஜேஷ் , ஈஸ்வர் பாபு , தடுப்பு ஆட்டக்காரர்கள் நவீன் குமார் ,ராகுல், தனுஷ் பாண்டியன், அழகு மோகன பிரியன் , கௌதம், அருண், சிபி யுவராஜ், கிரி செல்வன், முன் கள ஆட்டக்காரர்கள் விஷால், சுகுமார், முருகேஸ்வரன், பூல் பாண்டி ,முகுந்தன், கௌதம், கபிலன், பரத் ஆகியோர் விளையாடுகின்றனர். அணியின் பயிற்சியாளராக முத்துக்குமார,; மேலாளராக காளிமுத்து பாண்டியராஜா, துணை பயிற்சியாளராக மாயாண்டி அணியின் மருத்துவராக பாலாஜி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இன்று காலை கோயம்புத்தூர் புறப்பட்டு சென்றனர்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0